மாரா தலைவர்: சொத்து கொள்முதலுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்

 

mara chairஆஸ்திரேலியாவில் மாரா வாங்கிய சொத்துகளுக்கு பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புதல் அளித்தார். அச்சொத்துகள் அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாரா மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளுக்கும் நிதி அமைச்சு அல்லது நஜிப்பின் தலைமையில் இயங்கும் அரசாங்க பொருளாதார மன்றத்தின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்று மாரா தலைவர் அனுவார் மூசா கூறினார்.

“இது நடைமுறையின் ஓர் அங்கமாகும்”, என்று கோலாலம்பூர் மாரா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

டட்லி ஹவுஸ் வாங்கியதில் கையூட்டு மற்றும் கூடுதல் விலை கொடுக்கப்பட்டதாக த ஏஜ் கூறியிருந்தது குறித்து மாராவுக்கு எதுவும் தெரியாது. அக்கொள்முதலை செய்தது மாராவின் துணை நிறுவனம் மாரா இங் செண்ட். பெர்ஹாட் என்றும் அவர் கூறினார்.