பக்கத்தான் தலைவர்கள் பக்கத்தான் 2.0 பற்றிப் பேசுகிறார்களா?

pakaபிகேஆர், டிஏபி. பாஸ்  முற்போக்காளர்கள்  ஒன்றாக  அமர்ந்திருக்கும் நிழற்படமொன்று  நேற்று  சமூக வலைத்தளங்களில்  வலம்  வந்தது.

அப்படத்தைப்  பதிவிட்டிருந்த  சிபூத்தே  எம்பி  தெரேசா கொக், அது  நேற்றிரவு பாஸ்  தும்பாட்  எம்பி  கமருடின்  ஜாபாரின்  வீட்டில்  நோன்பு  திறக்கும்  நிகழ்வின்போது  பிடிக்கப்பட்டது  என்று  கூறினார்.

“பாஸ்  காங்கிரஸ்  டிஏபியுடன்  உறவுகளை  குறித்துக்கொள்ள  முடிவு  செய்தது, ஆனால்  இன்றைய  இரவு  பக்கத்தான்  2.0 பிறக்கப்போகிறது  என்ற  நம்பிக்கையைக்  கொடுப்பதாக  அமைந்தது”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

அப்படத்தில்  முன்னாள்  பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு, டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்,  முன்னாள்  பாஸ் உதவித்  தலைவர் சாலாஹுடின்  ஆயுப்,  ஷா ஆலம்  எம்பி  காலிட்  சமட், சுங்கை  பட்டாணி  எம்பி  ஜோகாரி  அப்துல், பாடகர்  வான்  அய்ஷா,  பிகேஆர்  உதவித்  தலைவர்கள்  தியான்  சுவா,  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகம்மட்  அகின்  ஆகியோர்  காணப்பட்டனர்.

பாஸ்  முற்போக்காளர்களைக்  கொண்ட  ஜி-18 அந்நிகழ்வுக்கு  ஏற்பாடு  செய்ததாக  ஷம்சுல்  தெரிவித்தார்.