மன்னிப்பு வாரியம் முடிவை மறுஆய்வு செய்ய அன்வார் கோரிக்கை

pardonsஅன்வார்  குடும்பத்தார், அவர்களின்  கோரிக்கையை  நிராகரித்த  மன்னிப்பு  வாரியம்  அதன்  முடிவை  மறு ஆய்வு  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளும்  மனுவை  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  பதிவு செய்தனர்.

சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  அப்துல் கனி  பட்டேய்ல்  அன்வாரின்  வழக்கில்    சம்பந்தப்பட  மாட்டார்  என்று  அப்துல்லா  படாவி  பிரதமராக  இருந்தபோது   உத்தரவாதம்  அளித்திருந்தார்  ஆனால்  மன்னிப்பு  வாரியத்தின்  கூட்டத்தில்  ஏஜி  கலந்துகொண்டார். அதை  அடிப்படையாக  வைத்து  அவர்கள்  அம்மனுவைச்  செய்துள்ளனர்.

மன்னிப்பு  வாரியத்தின்  மார்ச்  16  முடிவை  இரத்துச்  செய்து  வாரியம்  மறுபடியும்  கூடி  எல்லா  விவகாரங்களையும் சீர்தூக்கிப்  பார்த்து  பொருத்தமான  ஆலோசனையைப்  பேரரசருக்குத்  தெரிவிக்க  வேண்டும்  என்று  நீதிமன்றம்  உத்தரவிட  வேண்டும்  என்றவர்கள்  அம்மனுவில்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.