மாரா மேலும் இரண்டு துணை நிறுவனங்களைக் கண்காணிக்கிறது

anuarமாரா, மாரா இன்க்  தவிர  மேலும்  இரண்டு  வணிக துணை நிறுவனங்களிலும்  முறைகேடுகள்  நிகழ்ந்திருக்கும்  சாத்தியத்தை  ஆராய்ந்து  வருவதாக  அதன்  தலைவர்  அனுவார்  மூசா  கூறினார்.

ஆனால், அந்நிறுவனங்களின்  பெயர்களை  அவர்  வெளியிடவில்லை.

“இரண்டு  துணை  நிறுவனங்கள்  வணிக  நடவடிக்கைகளில்  தீவிரமாக  ஈடுபட்டு  வருகின்றன. மாரா  மன்றம் அவற்றைக்  கண்காணிக்கும்  பணியில்  முனைப்புடன்  ஈடுபட்டிருக்கிறது”, என்றாரவர்.