விரைவில் வருகிறது அனைவருக்குமான புதிய இஸ்லாமிய கட்சி

partyபுதிய  இஸ்லாமியக்  கட்சி  ஒன்று  விரைவில்  உருவாகலாம். அதன்  போராட்டத்தை  ஏற்றுக்கொள்ளும்  அனைவருமே  அதில் உறுப்பினராகலாம்.

பாஸைப்  போல் அல்லாது  புதிய  கட்சியின் நோக்கங்கள்  ஊழலை  எதிர்ப்பது,  நீதிக்காகப்  போராடுவது  போன்று  வாழ்வியல் சம்பந்தப்பட்டவையாக  இருக்கும்.

ஆனாலும், இஸ்லாமிய  கோட்பாடுகளின்  அடிப்படையில்தான்  அக்கட்சி  செயல்படும்  என  பாஸ்  எம்பி  காலிட்  சமட்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“எல்லாரையும் அரவணைப்பதே  எங்கள்  அணுகுமுறை. முஸ்லிம்களும்  முஸ்லிம்- அல்லாதாரும்  எங்களுடன்  சேர்ந்து  ஊழலை  எதிர்க்க  வேண்டும்  என்பதே  எங்களின்  விருப்பம். இதற்காகத்தான் (காலஞ்சென்ற  பாஸ்  தலைவர்)  பாட்சில் நூரும்  பாடுபட்டார்.

“இது  இஸ்லாமிய  கோட்பாடுகளின்  அடிப்படையில்  அமைந்த இஸ்லாமிய  போராட்டம். ஆனால், போராட்டத்தின்  அடிப்படையை  ஏற்றுக்கொள்ள  முஸ்லிம்- அல்லாதார்  தயராராக  இருந்தால் ( அவர்கள் கட்சியில் சேர்வதில்)  பிரச்னை  இருக்காது”, என்றாரவர்.