மாரா ஊழல்மீது ஆஸ்திரேலிய போலீசார் நடவடிக்கை

maraஆஸ்திரேலியாவில் சொத்துகள்  வாங்கியதில்  ஊழல்கள் நிகழ்திருப்பதாகக்  கூறப்படுவதன்மீது  அந்நாட்டுப்  போலீசார்  அதிரடிச்  சோதனைகளை   நடத்தி  வருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை  மெல்பர்ன், வெர்மண்ட்  சவுத்-இல்  உள்ள  ஒரு  வீட்டைச்  சோதனையிட்ட  அதிகாரிகள்  விசாரணைக்கு  உதவியாக கணினிகளையும்  கோப்புகளையும்  கைப்பற்றியதாக  ஆஸ்திரேலிய  நாளேடான  த  எஜ்  கூறியது.

ஆஸ்திரேலிய  போலீசார் ‘ஒபரேசன்  கரம்போலா’ என்ற  நடவடிக்கையின்  ஒரு  பகுதியாக “ஆஸ்திரேலியாவில்   பல-மில்லியன்  டாலர்  சொத்துகளை வாங்குவதன்  மூலமாக மலேசியர்கள் பணச்சலவை நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை” விசாரணை  செய்து  வருவதாக  அது  கூறிற்று.

அதில்  மாரா  சம்பந்தப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது. அதனால்  மாரா தலைவர்  அனுவார்  மூசாவைப்  பதவிநீக்கம்  செய்ய  வேண்டும்  என்ற  கோரிக்கைகள்  எழுந்துள்ளன.