சிறுநீர் விவகாரம் தொடர்பில் கூறப்படும் சாக்குப்போக்குகளை ஏற்பதற்கில்லை

kogilan pillaiசுங்கைப் பட்டாணியில்  மூத்த  ஆசிரியர்  ஒருவர் முஸ்லிம்- அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிப்பறையில் சென்று அருந்தும்படியும், கழிப்பறையில் நீர் அருந்தும்பொழுது சிறுநீரை அருந்திவிடாதீர்கள் என்றும் முட்டாள்தனமாகக்  கூறி  வைத்ததைச்  சமூக  வலைத்தளங்களில்  பெரும்பாலோர்  கண்டித்துள்ளனர்.

கெராக்கான்  உதவித்  தலைவர்  ஏ.கோகிலன்  பிள்ளை  ஆசிரியருக்கு  எதிராகக்  கடும்  நடவடிக்கை  தேவை  என்றார். ஆசிரியரின்  கூற்று  தவறாக  புரிந்துகொள்ளப்பட்டதாக  கெடா  கல்வி அமைச்சு  கூறிய  “சாக்குப்போக்கு” ஏமாற்றமளிப்பதாகவும்  அவர்  சொன்னார்.

வளரும்  பிள்ளைகளிடம் பொருத்தமற்ற முறையில் ‘ஜோக்’கடித்த ஆசிரியர்மீது  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்  என்பதே  கெராக்கானின்  நிலைப்பாடு  என  கோகிலன்  கூறினார்.

“இதற்குமுன்  நோன்பு  மாதத்தில்  நிகழ்ந்த  சம்பவங்களைக்  கல்வி  அமைச்சு கவனத்தில்  கொள்ளத் தவறிவிட்டதா  அல்லது  முஸ்லிம்- அல்லாத  மாணவர்கள்  இன்னமும்  கழிப்பறையில்தான்  உணவருந்த  வேண்டுமா?”, என்றவர்  வினவினார்.