ஜோகூர் இளவரசரைத் தற்காக்கிறார் ‘Nothing2Hide’ ஏற்பாட்டாளர்

princeஅரசியல்வாதிகள்  முதலில்  மக்களுக்குச்  சேவை  செய்ய   வேண்டும்  என்று  ஜோகூர்  பட்டத்திளவரசர்  கூறியிருப்பதை  ஜோகூர்  அம்னோ  இளைஞர்  துணைவர்  கைருல் அன்வார்  ரஹ்மாட் வரவேற்கிறார்.

“இஸ்லாம்  நம் கருத்துகளையே  வெறித்தனமாக  பற்றிக்  கொண்டிருக்க  வேண்டும்  என்றோ  மற்றவர்களின்  கருத்துகளுக்கெதிராகக்  கண்ணை  மூடிக்கொள்ள  வேண்டும்  என்றோ  சொல்லவில்லை.

“நற்பேறும்  நிறைவளமும்  கொண்ட  நாட்டை  உருவாக்க  வேண்டுமானால்  தன்னலங்களையும் குறுகிய  அரசியல்  சித்தாந்தங்களையும்  ஒதுக்கி  வைக்க  வேண்டும்”, என்று கைருல்  அன்வார்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

‘Nothing2Hide’ ஏற்பாட்டாளருமான கைருல்  அன்வார்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்   இப்ராகிமை  ஆதரித்து  அறிக்கை விடுத்திருப்பது  இதுவே  முதல்முறையாகும்.