‘சிறுநீர்’ஜோக் சொல்லப்பட்ட பள்ளிமீது பெட்ரோல் குண்டு வீச்சு

schமுஸ்லிம் அல்லாத மாணவர்களிடம் சிறு நீர்  ஜோக்கடிக்கப்பட்ட  பள்ளிமீது  நேற்றிரவு  Molotov Cocktail எனப்படும்  பெட்ரோல்  குண்டு வீசப்பட்டுள்ளது.

கெடா, சுங்கை  பட்டாணி, ஸ்கோலா  கெபாங்சாஆன் இப்ராகிமில்  நேற்றிரவு 10மணி  அளவில்  அச்சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

பள்ளிக்குள்  வீசியெறியப்பட்ட அக்குண்டு  பள்ளியின் பாதுகாவலர் அறை பக்கத்தில்  விழுந்ததாக த  ஸ்டார்  ஆன்லைன்  கூறிற்று.

சம்பவத்தில்  யாரும் காயமடையவில்லை  என்றும் அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்  அது  மேலும்  கூறியது.