புவாவைப் பற்றிப் பேசாதீர்: ஷாபிக்கு பிஏசி தலைவர் எச்சரிக்கை

bossபொதுக்  கணக்குக் குழுவின்  வேலையில் தலையிட  வேண்டாம்  என  அக்குழுவின்  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  அம்னோ-தொடர்புடைய  வழக்குரைஞர்  ஷாபி  அப்துல்லாவை  எச்சரித்துள்ளார்.

மலேசியாகினியிடம்  பேசிய  நூர்   ஜஸ்லான், 1எம்டிபி-யைக் கடுமையாகக்   குறை  கூறுவதற்காக புவாவைக்  குழுவிலிருந்து  வெளியேறுமாறு  கூறும் உரிமை  ஷாபிக்குக்  கிடையாது  என்றார்.

“அரசாங்கத்தின்  மூன்றாவது  கிளையான  நாடாளுமன்றத்தின்  உறுப்பினர்களாகிய  பிஏசி  உறுப்பினர்களை, மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வெளியேறச்  சொல்லும்  உரிமை  அவருக்கு(ஷாபி) இல்லை”.

பிஏசி-யில்  தெரிவிக்கப்படும்  தகவல்களை  புவா  தம்  அறிக்கையில்  பயன்படுத்திக்கொண்டதில்லை  என்று  கூறிய நூர்  ஜஸ்லான்  உண்மையில் அவர்  1எம்டிபி  பற்றிய  முக்கியமான  விவகாரங்களை வெளிச்சத்துக்குக்  கொண்டு   வந்துள்ளார்  என்றார்.