சிலாங்கூர் அரசு விரிசல் ஏதுமின்றி முழுமையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவையும் பெற்றிருக்கும் மந்திரி புசார் அஸ்மின் அலி, அடுத்த வாரம் டிஏபி பிரதிநிதிகளைச் சந்திப்பார்.
சிலாங்கூர் பிகேஆர் மூன்று கட்சிகளுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் தொடங்கி அக்கட்சிகளின் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியே சந்தித்து வருவதாக அஸ்மினின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபி கூறினார்.
“ஒரு மாதமாக கலந்துரையாடல் நடந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுடன் வாரம்தோறும் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
“60 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடுவரையிலான சட்டமன்ற உறுப்பினர்களிடம் கிடைத்திருக்கும் பின்னூட்டத்தின் அடிப்படையில் 2008-இல் உருவான பக்கத்தான்(பக்கத்தான் மாநில அரசு) உடையாமல் தொடர்ந்து இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்”, என்றவர் ஷா ஆலமில் கூறினார்.
இப்ப யாரும் ஆதரவை வாபஸ் வாங்க மாட்டார்கள். அதன் பின் விளைவு அவரவருக்கு விபரீதமாக இருக்கும் என்பதால் நீங்கள் இராஜ போல கொஞ்ச நாளைக்கு பதவியை அலங்கரிக்கலாம்.