மாரா அதிகாரிகள் ரிம13.8மில்லியன் கையூட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

kitமஜ்லிஸ்  அமானா  ரக்யாட்(மாரா), அவசரக்  கூட்டம்  நடத்தி அதன்  அதிகாரிகளிடம்  அவர்கள்  மெல்பர்னில்  இண்டர்நேசனல்  ஹவுஸ்  கொள்முதலில் பெற்ற ஆ$4.75 மில்லியனைத்  திருப்பிக்  கொடுக்கும்படி  கோர  வேண்டும்.

இவ்வாறு  கூறிய  டிஏபி  பெருந்  தலைவர் லிம்  கியாட்  சியாங், மாரா  முதலீட்டுத்  தலைவர்  முகம்மட்  லான்  அல்லானியும்  மாரா  தலைமை  செயல்  அதிகாரி  ஹாலிம்  ரஹ்மானும்  அவர்கள்  பெற்ற  கையூட்டைத்  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்  என்றார்.

இவ்விவகாரம் தொடர்பில். அந்த  அடுக்ககத்தை ஆ$22.5(ரிம 65 மில்லியன்) மில்லியனுக்கு  வாங்கிய  மாராவின்  துணை  நிறுவனமான  மார  இங்க் ஒரு  வாரத்தில்  எழுத்துப்பூர்வமான  அறிக்கை  தாக்கல்  செய்ய  வேண்டும்  என மாரா  தலைவர்  அனுவார் மூசா பணித்துள்ளார்.

அனுவார்  மூசா, சர்ச்சைக்குரிய மெல்பர்ன் சொத்தை  வாங்குவது  பற்றி  தாம் 2013, ஜூலையில் மாரா  தலைவராக  நியமிக்கப்படுவதற்கு  முன்பே  முடிவு  செய்யப்பட்டு  விட்டதாக  நேற்றுக்  கூறினார்.

“மாரா இங்க்  சொத்து  மோசடி  பற்றித்  தமக்குத்  தெரியாது  என்று கூறும் அனுவார்  அதை  நிரூபிக்க  வேண்டும்”, என  லிம்  கூறினார்.

மாரா  இங்க்,  ஆஸ்திரேலியாவில்  மேலும்  மூன்று  சொத்துகள்  வாங்கியது  பற்றி  அனுவாருக்குத்  தெரியுமா  என்றும்  டிஏபி  பெருந்  தலைவர்  வினவினார்.

2009-இலிருந்து  புறநகர், வட்டார  மேம்பாட்டு  அமைச்சராக  உள்ள  ஷாபி  அப்டால் இவ்விவகாரத்தில்  மெளனமாக  இருப்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.

“மாரா  இங்க் சொத்து  வாங்கியதில்  நடந்துள்ள  தில்லுமுல்லு  பற்றி  அவர்  அறிய  மாட்டாரா?

“அனுவார்  அவர்  தலைவராவதற்கு  முன்பே  மார  இங்க்  சொத்து  வாங்குவது  பற்றி  முடிவு  செய்யப்பட்டு விட்டதாகக்  கூறுவது  உண்மை  என்றால்  அவருக்கு  முன்  இருந்தவர்  அதை   விளக்க  வேண்டும்”, என்றாரவர்.

ஆனால், அனுவாருக்குமுன்  மாரா  தலைவராக  இருந்த  கல்வி  அமைச்சர்  II இட்ரிஸ்  ஜூஸோ எதுவும்  சொல்லாதிருப்பது  ஏன்  என்றும்  லிம்  வினவினார்.