பெட்ரோல் விலை குறைந்திருக்க வேண்டும், உயர்ந்திருக்கக்கூடாது என்று எதிரணி எம்பிகள் கூறுகின்றனர். ஜூன் மாத இறுதியில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை குறைந்தது. பீப்பாய்க்கு யுஎஸ்$66-இலிருந்து நேற்று அதன் விலை யுஎஸ்$62 ஆகக் குறைந்திருந்தது.
அந்நிலையில் ரோன்95-இன் விலை லிட்டருக்கு 10 சென் உயர்ந்து ரிம2.15 ஆகி இருக்கக் கூடாது என்றார் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி. பார்க்கப்போனால், பிப்ரவரியில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு யுஎஸ்$60 ஆக விற்றபோது இருந்த விலைக்கு அது குறைந்திருக்க வேண்டும் என்றாரவர்.
“கச்சா எண்ணெய் விலை ஜூன் மாத இறுதியில் பீப்பாய்க்கு கிட்டத்தட்ட யுஎஸ்$60 என்ற அளவுக்குக் குறைந்தபோது ரோன்95-இன் விலை ரிம1.70 என்ற அளவுக்குக் குறைந்திருக்க வேண்டும்.
“ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கம், உலகக் கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு எதிராக ரோன்95-இன் விலையை நேற்று உயர்த்தி விட்டது.
புதிய பெட்ரோல் விலை இன்றிலிருந்து நடப்புக்கு வருகிறது. ரோன்97-இன் விலையில் 20 சென் உயர்ந்து லிட்டருக்கு ரிம2.55 ஆனது.
அண்மைய பெட்ரோல் விலையேற்றத்துக்கான காரணத்தை அரசாங்கம் விளக்கவில்லை. பெட்ரோல் விலை மாற்றங்கள் குறித்து முன்கூட்டிய அறிவிப்புகள் வெளியிடுவதில்லை என்ற கொள்கையையும் அது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் இப்புதிய கொள்கையை தெமர்லோ எம்பி நஸ்ருடின் ஹசான் சாடினார்.
“இது மக்களைப் பாதுக்காப்பதில் அரசாங்கத்துக்கு அக்கரை இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது. அதுவா மக்களின் சுமையைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது”, என்று குறிப்பிட்ட நஸ்ருடின் எரிபொருள் விலையேற்றம் பொருள்களின் விலை உயர்வுக்கு இட்டுச் செல்லும் என்றார்.
இது எல்லோருக்கும் தெரிந்ததே!! இதை எதிர்க்க ஆக்ககரமான வழி ஏதும் உள்ளதா என்பதே மக்களின் கேள்வி!!!
டியர் தேனீ ,ப்ளீஸ் எச்ப்ளின் ஒன திஸ் .தங்க யு. யுவர் பாரிசன் சுப்போர்ட்டர் தனெஹ்…???????
மக்களால் பதவிக்கு வந்தவர்கள் மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.மலேசியாவை பொருத்த வரை எந்த அரசியல் வாதியும் மக்களுக்கு சேவை செய்வதற்குஅரசியலுக்கு வருவதில்லை.நம் மூலமாக தங்கள் வசதியை மேம்படுத்திக் கொள்ளவே அரசியலுக்கு வருகிறார்கள்.நம் இலவச வாக்கு அவர்களை செல்வந்தர்களாக மாற்றுகிறது. தேர்தலுக்கு தேர்தல் நம்மை நாடி ஓட்டு பிச்சை கேட்பதுதான் இவர்கள் செய்யும் சேவை. மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு நாள் மட்டுமே இவர்களுக்கு போதுமானது.
பெட்ரோல் விலை மாற்றங்கள் குறித்து முன்கூட்டிய அறிவிப்புகள் வெளியிடுவதில்லை என்ற கொள்கையையும் அது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.// விளங்கி கொள்ளுங்கள் இனி மாதா மாதம் எரிபொருள் விலை எகிறிக்கொண்டே போக போகிறது , எதுக்கு சொல்லணும் ?
பெரும்பாலான 3ம் உலக அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கவே அரசியலுக்கு வருகின்றான்கள். சேவை என்பது கண் துடைப்பே – நெல்சன் மண்டேலா போன்றவர்கள் விரல் விட்டு எண்ணலாம். பதவியில் எக்காலமும் எந்த வகையிலும் இருக்கவே பெரும்பாலானவர்கள் எல்லா முயற்சியும் செய்கின்றனர்.
மக்கள் என்னதான் சத்தம் போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.ஆட்சி தன் கையில் உள்ளது என்ற அகங்காரத்தில் விலை எற்றி மக்கள் சுமையில் வாழ்வது அவர்களுக்கு கவலையில்லை.மாற்றத்தை ஏற்படுதாவிடில் சுமை மக்களுக்கே.
விழித்தெழு சமுதாயமே.
ஜி எஸ் தி,விலை வாசி,என்னை விலை ஏற்றம் உச்சிக்கு போயி விட்டது நமது துன்பம் அப்படி இருந்து இன்னும் ஆதரிகிறார்கள் அவர்களை.ஆதரிக்கும் அவர்களை என்ன என்று சொல்வது….
சுயநல பேராசையுடன், மக்கள் நலன் என்ற போர்வையில் கருவூல கஜானாவை சுரண்டிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி, தமக்கு வேண்டியோரை ஆங்காங்கே ஊன்றி, எல்லா நிலையிலும் இரும்புக் கரம்போல் பற்றி, மக்களுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் “டிமிக்கி கொடுத்து” (கொள்ளை) லாபம் பெறுகின்றனர். மாறுவதும் மாற்றுவதும் அவதிப்படும் பாமர மக்கள் கையிலே உள்ளது. 14வது பொதுத் தேர்தல் இதற்கு நல்ல பதில் சொல்லும் என்றே எதிர்ப் பார்ப்போம்!! அதுவரையில் அநியாயத்துக்கும் அட்டூழியங்களுக்கும் எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருப்போம்!!!
மக்களுக்கு சுமை ஏற்றினால் அது அராஜக அரசாங்கம் என்பதை வரலாறு தொன்று தொட்டு அறிவித்து வருகின்றது. மக்கள் வயிறு எரிய எண்ணை விலையை ஏற்றினால் அவர்கள் ஆட்சி சாம்பலாகப் போவதை அறியாமல் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம். யாம் எந்த கட்சி ஆதரவாளரும் இல்லை. எம் கட்சி மக்கள் கட்சி.
1 எம் டி பி கடன்ல மூழ்குது இல்ல அத காப்பாத்த வேண்டாமா , அடி ராஜா அடி இஷ்டம் போல் கொள்ள அடி . யாரு கேக்கறது அதான் எல்லாத்தையும் புடிச்சி அக்தா அசுதான் நு உள்ள தல்ரையே , இதுக்கு டான் அவசர அவசரமா அனுவர உள்ள தல்ல்னையா திருட்டு பு…………..