வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ) மற்றுமொரு பரபரப்பான செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதை மலேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாக அச்செய்தி கூறிற்று.
அரசாங்கப் புலனாய்வு ஆவணங்களை வைத்து WSJ இவ்வாறு கூறியது.
அந்த ஆவணங்கள் முதன்முறையாக நஜிப்புக்கும் அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் காண்பிப்பதாக அந்த நாளேடு தெரிவித்தது.
“பணம் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள், 1எம்டிபி-யுடன் தொடர்பு கொண்ட பல நிறுவனங்களுக்குச் சென்று முடிவில் நஜிப்பின் கணக்கைச் சென்றடைந்ததாக புலனாய்வு அதிகாரிகள் நம்புகிறார்கள்”, என WSJ கூறியது.
கோவிந்தா! கோவிந்தா!. பதவி பறிபோகும் என்று பழனிவேல் கவலைப் படத் தேவை இல்லை!. கவலைப் பட வேண்டியது சுப்ரமணியமே. புதிய பிரதமர் வருவார். புதிய அமைச்சரவையில் ம.இ.க. விற்கு ஓர் அமைச்சர் பதவி மட்டுமே!. வெளிநாட்டு ஊடங்ககளைக் கொண்டு வெச்சாண்டா மாமக்தீர் பயங்கரமான ஆப்பு.
மாடினையா கொள்ளைக்கார…………… இன்னும் கொள்ளகி அடி , அதுக்கு தானே பரிசான் இருக்கே . முட்டாள் எல்லோரும் டான் உனக்கு ஒட்டு போடறாங்க , நீ அவங்க எல்லோரையும்……….. து விடறே !
‘ஹா!ஹா!’ என்று சிரித்துவிட்டுப் போய்விடுவார்! அரசியல்வாதி அகப்படவே வழியில்லை!
மத்திய வங்கி, தமது விசாரணையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை விடலாமல்லவா?? அல்லது PAC யிடம் விசாரிப்பு அறிக்கையை சமர்ப்பிக்கலாமல்லவா?? MACC யின் விசாரணைதான் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது??? பிரதமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றால் சும்மா விடலாமா?? தைரியமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுதான் சிறந்தது. நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு கிரீஸ் நாட்டுடன் இணைந்திடுமா என்று எண்ணுகையில் குலை நடுங்குகிறது!!!
“BR1M” என்று லஞ்ச பணத்தை வலுகட்டயாமாக மக்களிடம் தினிக்கும்போதே, எதோ பெருசா சுருட்ட போகிறார் என்ற மக்களின் எதிர்பார்ப்பை மெய்பித்த முதல் மலேசிய பிரதமர் நஜிப்.
நமது மண்ணில் ஓர் சாதனை தலைவன் ஹி ஹீ ஹி
குலை நடுங்குவது என்ன!. இதனால் வரப்போகும் ‘Collateral damage’ அனைத்து மக்களையும் பாதிக்கவே செய்யும். மேலும் மூயிடினை நம்பி வர்த்தகர்கள் பொருளாதாரத்தில் பண முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கல்லில் நார் உரிப்பதர்க்குச் சமமாகும். இன்னும் 6 மாதத்தில் சொத்து பரிவர்த்தனை சந்தையில் அடி விழும். நம்மவர் சொத்து பரிவர்த்தனையில் கொஞ்சம் உசாராக இருப்பது நலம்.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் ,இவனை ஜெயிலில் தான் போடா வேண்டும் ,,
பேங்க் நெகரா RM30,000/= – வெள்ளிக்கு மேல் ஒரு வங்கி கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப் பட்டால் கண்கானிப்போம். அது பணத்தை சலவை செய்யும் நடவடிக்கையா என்று விசாரிப்போம். அப்படி பணம் வங்கியில் போட்டால் அதற்கு வங்கிகள் காரணம் கேட்க வேண்டும் என்றும் பல விதிமுறைகள் வைத்திருந்தும் பேங்க் நேகராவுக்குத் தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய தொகைகள் வங்கியில் பட்டு வாடா செய்திருக்க முடியும்?. ஆக இந்த நாட்டில் அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் என்பது மீண்டும் நிரூபனம் ஆகி உள்ளது. அப்படியானால் இத்தகைய இழிவான செயலுக்கு பேங்க் நெகரா கவர்னர் ஜெத்தி அக்தார் அஜிசும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். Ambank தலைமை நிர்வாகிகளும் பதவியில் இருந்து நீக்கப் பட வேண்டும். அரசாங்கமே ஒட்டு மொத்த ஊழலில் சிக்கி தவிக்கும் நிலையில் தே.மு. பங்காளி கட்சிகள் திருட்டு முட்டாள் கட்சிகள் போன்று வாய் மூடிக் கொண்டிருப்பது மக்களின் நம்பிக்கையில் மண்ணை வாரிப் போடுவதர்க்குச் சமம். எங்கே அந்த ம.இ.க. இளைஞர் மகளிர் பிரிவு வீராதி வீர தலைவர் தலைவி?. ம.இ.க. இண்டியன்கள் கிட்டதான் இவர்கள் வீராப்பு. அம்னோ கிட்ட இவர்கள் வீராப்பு காட்டினால் அப்புறம் அவர்கள் இவர்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள் என்ற பயம். எங்கே அந்த இடைக்காலத் தலைவர் என்று தன்னைத் தானே தூக்கி நாற்காலியில் உட்கார வச்சிகிட்ட சுப்பிரமான தலைவர்?. ஊடங்கங்களை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நாளுக்கு நாள் தனக்கு சாதகமாக அறிக்கைகளை வெளியாக்கி கொண்டிருக்கும் அந்த சரவணபவமானவரு எங்கே?. அனைத்துப் பேரும் பெட்டைக் கோழிகள். தமிழரிடம் மட்டும் வாய் சவடால் பேசத் தெரிந்த வீரர்கள். இவர்கள்தான் இன்டியன்களின் தலைவர்கள்?. இவர்கள் பின்னாலும் ஒரு ம.இ.க. வருபோகிகள் கூட்டம்!.
சோதனை மேல் சோதனை போதுமட சாமி என்று பாடத்தோன்றும் என்னசெய்வாது?ஊழ்வினை பயன் !