பினாங்கு எதிரணித் தலைவர் டத்தோ ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாத பாட்டி” என அழைத்ததற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் மீது தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்.
லிம் இழப்பீடாக ரிம500,000-மும் வழக்கு தொகையான ரிம40,000-மும் கொடுக்க வேண்டும் என நீதி ஆணையர் நோர்டின் ஹசான் தீர்ப்பளித்தார்.
டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் மீண்டும் அதே போன்ற தவற்றைச் செய்யக்கூடாது என்றும் நீதி ஆணையர் உத்தரவிட்டார்.
இன்று, செபராங் பிறையில் செய்தியாளர்களிடம் பேசிய லிம், “வழக்குரைஞர்கள் மேல்முறையீடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டேன்”, என்றார்.
இப்ப இவருக்கு இந்த பாட்டு படிக்கனுமுன்னு தோணும்:
புவா பாலா கிராமம் உடைக்கபட்டது தமிழர்களுக்கு பெரிய இழப்பு.இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உனக்கு பெரிய இழப்பு.அன்று செய்தது துரோகம் மக்களின் மன கொந்தளிப்பு . இன்று மக்களின் விரக்தியின் வெளிப்பாடுகளுக்கு கிடைத்த தீர்ப்பு.
இவர்கள் செய்தால் உடனே திர்ப்பு.
சரித்திரம் தெரியாய அரவேக்காடு ஒன்று, புவா பாலா விவகார தொடர்பில் DAP மீது குறை சொல்லுது !
சரித்திரம் தெரிந்த நொந்தா நாயகனே புவா பாலா விவகாரம் பற்றி சொல்லுங்களேன் ?
தேர்தல் நேரத்தில் உடைபடாது என்று வாக்குறுதி,பிறகு உடைப்பு.இதுபோன்று சீனர் கிராமமாக இருந்தால் உடைப்பு நடந்திருக்குமா? மலாக்கா புக்கிட் சீனா இடுகாடு பாரம்பரியம் என்று போராடியது இந்த டி எ பி தானே ? அந்த போராட்டம் எங்கே பொயிற்று பூவா பாலா கிராமம் விவகாரத்தில் ?
சரித்திரம் தெரியாத அர வேக்காடு இதை கொஞ்சம் கேள் ! புவா பாலா நிலத்தை அங்கு இருக்கும் மக்களுக்கு தெரியாமல் மாநில கெரக்கான் அரசு , பெடரல் அரசுக்கு கொடுத்து விட்டது , இது அறிந்தும் பினாங்கு MIC , புவா மக்களுக்கு தகவல் சொல்லவே இல்லை ! பெடரல் அரசு மலாய் காரர் கோப்ராசிக்கு கொடுத்து விட்டது ,கோப்ராசி என்றால் பெடரல் பார்வைக்கு வந்து விடும் , ஆகையால் புவா பாலா விவகாரம் புத்ரா ஜெயாவில் செவிமெடுகப்பட்டது,தீர்ப்பும் வழங்கப்பட்டது ,உல் விவகாரம் தெரியாமல் 2008 தேர்தல் வாக்குறுதியை DAP வாரி வழங்கியது உண்மையே ! பொது தேர்தலுக்கே பிறகு புவா பாலா நிலை , மாநில DAP அரசுக்கு உல் விவகாரம் தெரியவந்தது ! புவா பாலா மக்களை ஏமாற்றியது முன்னாள் மாநில கெரக்கான் , ம இ கா , BN அரசாங்கம் , DAP யை திட்டி என்ன பயன் ?