டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். வால் ஸ்திரிட் ஜர்னல் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளை விலக்கித் தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள நஜிப்புக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றாரவர்.
முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அக்கூட்டம் நாளை நண்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
1எம்டிபி-இன் யுஎஸ்$700 மில்லியன் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பது மலேசிய விசாரணையாளர்களின் ஆவணங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக WSJ கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருப்பதைக் கண்டு பொறுப்பும் நாட்டுப்பற்றும் கொண்ட எம்பிகள் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதாக கேளாங் பாத்தா எம்பியுமான லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
இக்குற்றச்சாட்டுகளால் உலக அரங்கமே பரபரப்படைந்துள்ள வேளையில் மலேசியாவில் மட்டும் அரசாங்கத் தலைவர்களும் அமலாக்கத் துறைகளும் எதுவுமே நடக்காததுபோல் பாவனை செய்து கொண்டிருப்பது ஏன் என லிம் வினவினார்.
இங்கிருந்து மலேசியா, குறிப்பாக மலேசிய அரசாங்கம் அடுத்து எங்கு செல்லும்? அனைத்துலக அரங்கில் மலேசியர்கள் எப்படி தலைநிமிர்ந்து நடக்கப்போகிறார்கள்?
இக்கேள்விகள் நாளைய கூட்டத்தில் அலசி ஆராயப்படும் என்றாரவர்.
முற்போக்கு எம்பிகள் WSJ செய்தி “உண்மை” “பொய்” என்ற முடிவுக்கு வந்தவர்களாக அல்லாமல் திறந்த மனத்துடனேயே அக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
நஜிப், அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைப் போக்கிக் கொள்ள அக்கூட்டத்துக்கு வரத் தயாரா? என்று லிம் வினவினார்.
மக்கள் பணம் என்றும் காக்கபட வேண்டும் , தனிமனிதன் அதற்கு ஆசைபடவேகூடாது, அதற்கு உதாரணம் கர்மவீரர் காமராஜர் , அவரை பின்பற்றினால் போதும் . தன் தலைவன் செய்வதெல்லாம் சரி என்று தாளம்போடகூடாது . மிக்க நன்றி