ரசாலி: உடை நெறிமுறைகளில் விட்டுக்கொடுக்க இயலாது

dress codeஅரசாங்க  அலுவலகங்களில்  பின்பற்ற  வேண்டிய  உடை  நெறிமுறை  குறித்து   எதிரணியினர்  உள்பட  சில  தரப்பினர்  கேள்வி  எழுப்புவதை  நிறுத்த  வேண்டும்  என்கிறார்  பிரதமர்துறை  துணை  அமைச்சர் ரசாலி  இப்ராகிம்.

அரசாங்க  அலுவலகங்கள்  செல்வோர் கண்ணியத்துடனும்  கட்டொழுங்குடனும்  நடந்து  கொள்ள  வேண்டும்  என்பதற்காகவே அது  கொண்டுவரப்பட்டது. அவ்விவகாரத்தை  யாரும்  கேள்வி  கேட்கக்கூடாது, அரசியலாக்கவும்  கூடாது  என்றும்   அவர்  கேட்டுக்கொண்டார்.

“இந்த  உடைநெறி  குறிப்பிட்ட  இனங்களுக்கு  மட்டுமல்ல. அனைவருக்குமானது”, என  ரசாலி  கூறினார்.

“எதிரணிக்கு  இந்த  உடை  நெறிமுறை பிடிக்கவில்லை  என்றால்  அவர்களின்  மாநிலங்களில்  சொந்த உடை  நெறிமுறையை  அறிமுகப்படுத்திக்  கொள்ளலாம். அங்கு பொதுமக்கள்  அரைகால்  சிலுவார்  அணிந்து  முதலமைச்சர்  அல்லது  மந்திரி  புசாரைச்  சந்திக்க  அனுமதிப்பார்களா  என்று  பார்ப்போம்”, என்றாரவர்.