ஜொகூர், மாசாயில் ஒரு காப்பிக் கடையில் நடந்த டிஎபி நிகழ்வில் தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் தேடுகிறது.
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டிருப்பதாக ஸ்டார் ஆன்லைன் செய்தி ஒன்று கூறிற்று.
ஜோகூர் டிஏபி நடத்தி வரும் ‘Kopitiam கலந்துரையாடல்’ தொடரில் ஒரு பகுதியாக நேற்று அக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்குமுன் நடந்த நிகழ்வுகளில் அது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை.
குளுவாங் எம்பி லியு சிங் தொங், அம்னோ தொடர்புடைய விவகாரங்கள் பற்றிப் பேசத் தொடங்கியதும் சிவப்பு-உடை அணிந்திருந்தவர்கள் கூட்டத்தில் குழப்பம் விளவித்தனர் என ஸ்ரீஆலாம் இடைக்கால ஓசிபிடி துணை சுப்பிரண்டெண்டண்ட் நோராஸாம் ஸாரி கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.
“அவர்கள் எம்பியைப் பேச விடாமல் தடுக்க முயன்றபோது குழப்பம் மூண்டது.
“அங்கிருந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்குதல் நடத்திவர்களைக் கலைந்து போகுமாறு கூறிய போலீசார் பொதுப் பாதுகாப்பைக் கருதி டிஏபி கலந்துரையாடலையும் நிறுத்தினர்”, என்றவர் கூறினார்.
மத வெறியர்களின் ஆர்பாட்டம்……இன வெறியர்களின் திண்டாட்டம் ……
ட்விட்டர் போஸுக்கு எங்க நேரம் இருக்கு
விசாரித்து விசாரித்து ஒன்றும் ஆகிவிடாது. அம்னோ குஞ்சுகளை யார் என்ன செய்ய முடியும்?