பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் தந்தையார் அப்துல் ரசாக் உசேன் உருவாக்கிய பெல்டாவை அழித்துக் கொண்டிருக்கிறார்.
இன்று மகாதிரைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக அனாக் தலைவர் மஸ்லான் அலிமான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“நஜிப் ஒழுக்கக்கேடு மிக்க ஒருவரை பெல்டா தலைவராக நியமித்தது ஏன் என்று மகாதிர் வினவினார்.
“அப்துல் ரசாக் அரும்பாடு பட்டு பெல்டாவை உருவாக்கினார். ஆனால், நஜிப் அதற்கு நேர் எதிரான வேலையைச் செய்து வருகிறார் என்றாரவர்”, என மஸ்லான் கூறினார்.
2004 கட்சித் தேர்தலில் பண அரசியலில் ஈடுபட்டதற்காக மூன்றாண்டுகளுக்கு அம்னோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இசா சமட்டை பெல்டா தலைவராக நியமித்ததைத்தான் மகாதிர் குறிப்பிடுகிறார்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். இவனும் இவன் அப்பனும் விதைத்த வினை இவன் சேர்த்து அறுக்கிறான்.
எல்லோரும் இப்ப உத்தம புத்திரன் போல போல் பேசுகிறார்கள் .
சம சுதந்திர உரிமை கிடைக்க வேண்டிய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நம்மவர்களுக்கு சிவப்பு அடையாள அட்டையை கொடுத்து நாட்டை விட்டு விரட்டி அடித்தவன் ரசாக்.ஆகா James கூறுவதை போல மீண்டும் அறுக்க தானே வேண்டும்! கெடுவான் கேடு நினைப்பான்…
மானம் தமிழ் நாடு வரைக்கும் கப்பல் ஏறிவிட்டதாம் ,சூப்,,,,
“நஜிப் ஒழுக்கக்கேடுமிக்க ஒருவரை பெல்டா தலைவராக நியமித்தது”,,
இனம் இனத்தோடுதான் சேரும் என்பதை நிருபித்து விட்டார்.
இதென்ன புதுசா?
58 ஆண்டுகள் இதுதானே நடந்திருக்கிறது? எக்காலத்தில் இவன்கள் தகுதிக்கும் தரத்திற்கும் மதிப்பு கொடுத்தான்கள்? தோலும் மதமும் தான் இவன்களுக்கு-முக்கியம்–அதுவும் காகாதிமிர் இன பாகுபாட்டை முக்கியமாக்கினான். அதுவே இப்போது ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறது .
காக்காதிர் நீ செய்த வேலைதான் உன் சகா செய்கிறார் , இதில் என்ன தவறு கண்டாய்? அன்று திமிர் பேச்சு இன்று உத்தமன் பேச்சு.போதும் போதும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இனத்துவேசம் கொண்டவன் நீ. அதன் விளைவு இன்று உனக்கு பாடம்.
நம்முடைய இழிநிலை எல்லாம் நம் துரோகிகளால் நமக்கு கிடைத்தவை.விதை இல்லா ஈன ஜென்மங்கள் நம்மை விற்று வயிர் பிழைக்கும் கேடு கெட்ட சேமங்கள். சம்பந்தன் முதல் தற்போதைய கையால் ஆகாத தலைகள் தான் இன்று நம்மை இந் நிலைக்கு ஆளாக்கினர். தைரியமில்லா தொடை நடுங்கிகளும் எதற்கெல்லாமோ முத்தம் கொடுக்கும் சண்டாள பிண்டங்களும் நம்மை கூறு போட்டு விட்டனர். சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலையை – மூன்று இனங்களுக்கு இருந்த உரிமைகளை நிலை நாட்டுவான்களா? அப்போது சம்பந்தன் மக்களவைக்கு வெட்டியில் செல்ல முடியும்- இப்போது?
1980 களில் உன்னுடைய அராஜகம் அதுதான் வாழையடி வாழையாக தொடர்கிறது !இப்போது குத்துது , குடையுது என்றால் எப்படி ?