தலைவருக்கு எதிரான கட்டுக்கதைகளை நம்பாதீர்: கட்சி உறுப்பினருக்கு தெங்கு அட்னான் அறிவுறுத்து

ku nanதங்கள்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கு  எதிராக  பல்வேறு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டாலும்  அம்னோ  உறுப்பினர்கள்  அமைதி காக்க  வேண்டும்.

இவ்வாறு  கேட்டுக்கொண்ட  கட்சித் தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர். அம்னோ கட்சியினர்  தலைமைக்குப்  பிளவுபடாத  விசுவாசத்தைக்  காட்டிட  வேண்டும்  என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு  எதிராக  சிறந்த  நடவடிக்கை  எடுப்பதற்கு நஜிப்புக்கு  வாய்ப்பு  வழங்கப்பட  வேண்டும்  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்.

“இப்போதைய  நிலவரத்தில்  நாம்  எச்சரிக்கையாக  நடந்து  கொள்ள  வேண்டும். நமக்குப்  பாதுகாப்பாக  விளங்கும்  நம்  ஒற்றுமையை  ஒழிப்பதற்கு,  மற்றவர்கள்,  குறிப்பாக  எதிரணியினர்  காத்திருக்கிறார்கள்.

“அவர்களின்  சூழ்ச்சிகளுக்கும்  தூண்டுதல்களுக்கும்  நாம் பலியாகி  விடக்கூடாது”, என்று  தெங்கு  அட்னான் ஓர்  அறிக்கையில்  கூறினார்.