நஜிப் விடுப்பில் செல்ல எம்பி-கள் ஏற்பாடு செய்தல் வேண்டும்

leaveஎதிரணி  எம்பிகள் துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினைச்  சந்தித்து  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கை விடுப்பில்  அனுப்பி  வைக்குமாறு  கேட்டுக்கொள்ள  வேண்டும்.

“எதிரணி  எம்பிகள்  துணைப்  பிரதமரைச்  சந்திக்க  வேண்டும். அவரிடம்  பிரதமரை  விடுப்பில்  செல்லுமாறு  அறிவுறுத்துங்கள்  என  வலியுறுத்த  வேண்டும்”, என  நெகாரா  கூ  என்ஜிஓ-வின்  புரவலரான  எஸ்.அம்பிகா  கூறினார்.

நஜிப்புக்கு  எதிராக  புலன்  விசாரணை  நடப்பதால் அது  நியாயமான  முறையில்  நடப்பதற்கு  இது  அவசியம்  என்றாரவர்.

ஓராண்டுக்குள்  பொதுத்  தேர்தலை  நடத்துவதுகூட  நல்லதுதான்  என  அந்த  முன்னாள்  பெர்சே  தலைவர் கூறினார். அது ஒரு  புதிய  அரசாங்கத்தைத்  தேர்ந்தெடுக்க  பொதுமக்களுக்கு  வாய்ப்பு  அளிப்பதுபோல்  இருக்கும்  என்றாரவர்.

இன்று  நாடாளுமன்ற  சதுக்கத்தில்  எதிரணி  எம்பிகளும்  என்ஜிஓ  பேராளர்களும்  கலந்துகொண்ட  கூட்டத்தில்  பேசியபோது  அம்பிகா  இவ்வாறு  கூறினார்.