முடக்கப்பட்ட 6 கணக்குகளில் மூன்று நஜிப்பினுடையவை

acct1எம்டிபி-இன்  ரிம2.6 பில்லியன்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவது  பற்றி  விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழு  அவ்விவகாரத்தின்  தொடர்பில்  ஆறு  வங்கிக்  கணக்குகளை  முடக்கி  வைத்திருப்பதாக  தெரிவித்தது.

ஆனால், அவ்வங்கிக்  கணக்குகள்  யாருடையவை  என்பதை  அது  தெரிவிக்கவில்லை. அந்த  ஆறில்  மூன்று  பிரதமருக்குச்  சொந்தமானவை  என்பது  மலேசியாகினிக்குத்  தெரிய  வந்துள்ளன.

நடக்கும்  விசாரணை  பற்றி  நன்கு  அறிந்த வட்டாரமொன்று  அதைத்  தெரிவித்தது.

“ஆம். மூன்று அவருடையவை (நஜிப்பினுடையவை)”, என்று அது  கூறியது.

மற்ற மூன்று  கணக்குகள்  யாருக்குச்  சொந்தமானவை  என்பதை  அது  வெளியிடவில்லை.