நஜிப் பற்றி விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் தேவை

wanஅரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபி  நிதி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தனிப்பட்ட  கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவது  பற்றி   விவாதிக்க  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்துக்கு  ஏற்பாடு  செய்யப்பட   வேண்டும்.

வால்  ஸ்திரிட்  ஜர்னலின்  கூற்று கடுமையானது  என்பதால்  அதை  விவாதிக்க  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டம்  அவசியம்  என  எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயில்  கூறினார்.

“அதில்  பேங்க்  நெகாரா  கவர்னரும்  சட்டத்துறைத்  தலைவரும்  கலந்துகொண்டு  அவ்விவகாரம் மீதான  விசாரணைகள்  பற்றி  விவரிக்க  வேண்டும்”, என  வான்  அசிசா கூறினார்.

“விசாரணை  முடியும்வரை  பிரதமர்  விடுப்பில்  செல்ல  வேண்டும்”, என  நாடாளுமன்றத்தில்  எம்பிகளும்  என்ஜிஓ  பேராளர்களும்  கலந்துகொண்ட  ஒரு  கூட்டத்தில்  அவர்  குறிப்பிட்டார்.