மகாதிர்: நாட்டை அசிங்கப்படுத்தியவர் நஜிப், நானல்ல

emba1எம்டிபி  குழப்படி  மூலம்  நாட்டை  அசிங்கப்படுத்தியவர்   பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  என டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார்.

“மற்ற  நாடுகள்  என்றால்  இப்படிப்பட்ட  ஊழலில்  சம்பந்தப்பட்ட  தலைவர்  பதவி  விலகுவார், மன்னிப்பு  கேட்பார்.

“ஆனால், மலேசியாவில்  தக்கக்  காரணமின்றி  தங்கள்  தலைவரை  விழுந்து  விழுந்து  பாதுகாப்பார்கள், தங்கள்  பதவியைக்  காத்துக்கொள்ள  வேண்டும்  என்பதற்காக.

“1எம்டிபி  மூலமாக  நாட்டை  அசிங்கப்படுத்தியவர்   நஜிப்பே”, என்று  மகாதிர்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.

நியு  யோர்க்  டைம்ஸுக்கு  அளித்த  நேர்காணலில்   மலேசியாவை  அசிங்கப்படுத்தி  விட்டார்  என்று  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்  குற்றஞ்சாட்டியிருப்பதற்கு மகாதிரின்  எதிர்வினை  இது.