வங்கி ஆவணக் கசிவு தொடர்பில் WSJ-இடம் போலீஸ் விசாரணை

igபிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரிம2.6 பில்லியன் மாற்றம் செய்யப்பட்டதாகக்  கூறப்படும்  செய்தியுடன்  தொடர்புள்ள ஆவணங்களை  வெளியிடப்பட்டிருப்பது  குறித்து  போலீசார் வால் ஸ்ட்ரீட் ஜார்னலிடம் விசாரணை  நடத்துவர்.

கணினிச்  சட்டத்தின்கீழ்   WSJ-இடம்  விசாரணை  நடத்தப்படும்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“வால் ஸ்திரிட்  ஜர்னலை  விசாரிப்போம்”, என்று  தெரிவித்த  அவர்,  அவ்விவகாரத்துடன்  சம்பந்தப்பட்ட  வங்கி  அதிகாரிகளும்  விசாரிக்கப்படுவார்கள்  என்றார்.

“தனிப்பட்ட  ஒருவரின்  அல்லது  ஒரு  நிறுவனத்தின்  வங்கித்  தகவல்களைக்  கசிய  விடுவது  நாட்டின்  பொருளாதாரத்தைப்  பாதிக்கலாம். அது  பொருளாதாரக்  கீழறுப்புக்கு  ஒப்பாகும்”, என்றாரவர்.

அந்த  வகையில்  பொருளாதாரச் சதியை  நோக்கமாகக்  கொண்ட  செயல்  என்ற  முறையில்  குற்றவியல்  சட்டம், பாதுகாப்புச்  சட்டம்  ஆகியவற்றின்கீழும்  விசாரணை  மேற்கொள்ளப்படும்  என காலிட்  தெரிவித்தார்.