‘வங்கிக் கணக்கைக் காட்டுங்கள், போதும்’- நஜிப்புக்கு மகாதிர் அறிவுறுத்து

bankபிரதமர் நஜிப்  அப்துல் ரசாக், அரசாங்கப்  பணத்தில்  யுஎஸ்$700 மில்லியனை(ரிம2.6 பில்லியன்)  எடுத்துக்  கொண்டார்  என்ற  குற்றச்சாட்டுக்கு  முடிவுகட்ட  அவரது  வங்கிக்  கணக்குகளைக்  காட்டினாலே  போதுமானது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“மக்கள்  அவர்மீது  குற்றம்  சுமத்தினால்  அதை  ஒரு  சதி  என்கிறார். அப்படிச்  சொல்வது அபத்தம். அது  உண்மையில்லை  என்றால்  நிரூபியுங்கள். நிரூபிப்பதும்  எளிதுதான்.

“அவரிடம்தான்  வங்கிக்  கணக்குகள்  உள்ளனவே. ‘இதோ  பார்த்துக்  கொள்ளுங்கள்’  எனக் காண்பித்தால்  போதுமே”. இன்று  காலை  பிரிட்டனின்  பிபிசி-க்கு  வழங்கிய  நேர்காணலில்  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.