பிஎன் தேர்தல் வெற்றிக்கு எதிராக பிகேஆர் வழக்கு தொடுக்கும்

nurபிஎன்  கடந்த பொதுத்  தேர்தலில்  வென்றது  செல்லாது  என்று  அறிவிக்கக் கோரி  பிகேஆர்  சிவில்  வழக்கு  ஒன்றைத்  தொடுக்கவுள்ளது.  1எம்டிபி  பணம்  பொதுத்  தேர்தல்  பரப்புரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக்  கூறும்  வால்  ஸ்திரிட்  ஜர்னல் செய்தியை  அடிப்படையாகக்  கொண்டு  அது  அவ்வழக்கைத் தொடுக்கும்.

“இயன்ற விரைவில்” வழக்கு  தொடுக்கப்படும்  என  பிகேஆர்  உதவித் தலைவர்  நூருல்  இஸ்ஸா  அன்வார்  தெரிவித்தார்.

அச்செய்திகள் பிஎன்னுக்கும்  அம்னோவுக்கு  நாட்டை  ஆளும்  தகுதி  உண்டா  என்ற  சந்தேகத்தை  ஏற்படுத்தி  இருப்பதாக  அவர்  சொன்னார்.

இவ்விசயத்தில் தேர்தல்  ஆணையம்  நடவடிக்கை  எடுக்கும்  என  எதிர்பார்க்க  முடியாது, அதன் “இயல்பு  தெரிந்ததே” என  அந்த லெம்பா பந்தாய்  எம்பி  கூறினார்.