1எம்டிபி தலைமையகத்தில் போலீஸ் அதிரடிச் சோதனை

raidபோலீஸ் கோலாலும்பூரில்  ஜாலான்  சுல்தான்  இஸ்மாயிலில்  உள்ள  1எம்டிபி  தலைமையகத்தில்  அதிரடிச்  சோதனை  நடத்தியுள்ளது.

காலை  மணி  11.30க்கு மெனாரா ஐஎம்சி-இல்  உள்ள   அலுவலகத்தில்  அந்த அதிரடிச்  சோதனை நிகழ்ந்ததாக த  ஸ்டார்  ஆன்லைன்  கூறிற்று.

அக்கட்டிடத்துக்கு  வெளியில்  மூன்று  போலீஸ்  வாகனங்கள்  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தன.  செய்தியாளர்கள்  அக்கட்டிடத்துக்குள்  அனுமதிக்கப்படவில்லை.

1எம்டிபி-இன்  சர்ச்சைக்குரிய  பரிவர்த்தனைகள்மீது  புலனாய்வு  செய்துவரும்  சிறப்புப்  பணிக்குழு, வெள்ளிக்கிழமை  மூன்று  நிறுவனங்கள்மீது — SRC International Sdn Bhd, Gandingan Mentari Sdn Bhd, Ihsan Perdana Sdn Bhd- அதிரடிச்  சோதனை  நடத்தியது.

நேற்று  அப்பணிக்குழு  புலன்  விசாரணையின்  ஒரு  பகுதியாக  ஆறு வங்கிக்  கணக்குகள்  முடக்கப்பட்டிருப்பதாக  தெரிவித்தது.