பணிப்படை: பிரதமரின் வங்கிக் கணக்குகள் மூடப்பட்டு விட்டதால் அவை முடக்கப்படவில்லை

 

Task forceபிரதமர் நஜிப் ரசாக் அம்பேங் இஸ்லாமிக்கில் வைத்திருந்த அவரது சொந்த கணக்குகள் முறையே ஆகஸ்ட் 30, 2013 லும், மார்ச் 9, 2015 லும் மூடப்பட்டு விட்டன என்று பணிப்படை இன்று வெளிப்படுத்தியது.

இருப்பினும், அந்த கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்ககளை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

இத்தகவலை பணிப்படையின் உறுப்பினர்களாகிய சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில், பேங்க் நெகாரா கவர்னர் ஸெடி அக்தார் அஸிஸ், போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் மற்றும் எம்எசிசி தலைவர் அபு காசிம் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்டு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 6 இல், ஆறு கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற முடக்கல் உத்தரவு வெளியிடப்பட்டது குறித்து பணிப்படை விளக்கம் அளித்தது.

வங்கிக் கணக்குகளில் மூன்று நஜிப்புக்கு சொந்தமானவை என்று ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியை கனி பட்டேயில் நேற்று மறுத்தார்.