சரவாக் ரிப்போர்ட்: ரோஸ்மா வங்கிக் கணக்கில் ரிம2மில்லியன் வைக்கப்பட்டுள்ளது

 

Rosmah's accountஒரு புதிய திடுக்குறச் செய்யும் குற்றச்சாட்டில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூருடையது என்று கூறப்படும் ஒரு வங்கிக் கணக்கில் ரிம2மில்லியன் வைக்கப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் கூறிக்கொண்டுள்ளது.

இத்தகவல் அஃப்பின் பேங்க் பெர்ஹாட்டிலுள்ள ஒரு வங்கிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த வலைத்தளம் கூறிற்று.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இரண்டே மாதத்தில் ரொக்கமாக இப்பணம் வங்கியில் வைக்கப்பட்டது என்று அது மேலும் தெரிவித்தது.

1எம்டிபி பற்றிய மலேசிய விசாரணைக் குழுவினரின் ஆவணங்களின்படி, அவை சரவாக் ரிப்போர்ட்டிற்கும் கிடைத்துள்ளது, “ரோஸ்லான் சொகாரி” என்ற ஒரு நபர் கோலாலம்பூரிலுள்ள அந்த வங்கியின் மத்திய கிளைக்குRosmah's account1 இவ்வாண்டு பெப்ரவரி 10லிருந்து ஏப்ரல் 23 க்கு இடையில் 8 தடவைகளில் சென்றுள்ளார்.

அந்த வருகைகளின் போது அவர் 8 தடவைகளில் ரிம2,000,000 க்கான பணத்தை வங்கிக் கணக்கு எண் 1000 XXXX XXXX, இல் வைத்துள்ளார். அது “ரோஸ்மா பிந்தி மான்சூர் (டத்தின் சிறீ)” க்குச் சொந்தமானது என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

மலேசியாகினி தொடர்பு கொண்ட போது, ரோஸ்மாவின் உதவியாளர் ரிஸால் மான்சூர் தாம் தற்போது நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு பிரதமரின் துணைவியாருடன் செல்வதால் அவ்விவகாரம் குறித்து பின்னர் கருத்துரைப்பதாகத் தெரிவித்தார்.