1எம்டிபி இயக்குனர்கள் இருவர், 2009-இல் பெட்ரோசவூதியுடன் கூட்டாக அமைக்கப்பட்ட (ஜேவி) நிறுவனத்துக்குச் செல்ல வேண்டிய யுஎஸ்$700 மில்லியன் வேறொரு நிறுவனத்துக்கு மாற்றிவிடப்பட்டடது பிடிக்காமல் பதவி விலகினர்.
1எம்டிபி பணக் கையாடல்மீதான விசாரணையில் இது தெரிய வந்திருப்பதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
1எம்டிபி வாரியத் தலைவர் முகம்மட் பக்கே சாலே, அஸ்லான் முகம்மட் சைனோல் ஆகியோரே அவ்விருவருமாவர். மாற்றிவிடப்பட்ட பணம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை புறக்கணித்தப்பட்டதால் அவ்விருவரும் ஆத்திரப்பட்டனர்.
“ஜேவி நிறுவனத்துக்குச் செல்ல வேண்டிய பணம் தங்கள் ஒப்புதலின்றி இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றிவிடப்பட்டதை அறிந்து வாரிய உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.
“யுஎஸ்700 மில்லியனும் ஜேவி நிறுவனத்துக்குத் திரும்ப வேண்டும் என்றவர்கள் பணித்தார்கள். ஆனால், அதைத் திரும்பப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”, என விசாரணையாளர் ஒருவர் தெரிவித்ததாக த ஸ்டார் கூறியது.
அப்போதே சொல்லி இருந்தால் நீங்கள் நேர்மையானவர்கள் என்று பாராட்டியிருப்போம். இப்போது சொல்லுவதால் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காதால் பதவி விலகினீர்கள் என்று நாங்கள் நினைக்கலாம் அல்லவா!