1எம்டிபி விவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் நூர் ஜாஸ்லான் பிரதமர் நஜிப் ரசாக்கை விசாரணைக்கு அழைக்க உறுதியாக இருக்கிறாரா என்று கேட்டால், பதில் நிச்சயமாக “இல்லை” என்று திடமாகக் கூறலாம் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.
அவ்வாறு செய்வதற்கு நூர் ஜாஸ்லானுக்கு துணிச்சல் உண்டா என்பதுதான் உண்மையான கேள்வி என்று ஸைட் அவரது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
இதர அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காணப்படாத அந்த ஒரு துளி துணைச்சலை சிறந்த எதிர்காலமுடையவராகக் கருதப்படும் இந்த மிடுக்கான மலாயு வெளிப்படுத்தி 2009 ஆம் ஆண்டிலிருந்து 1எம்டிபியின் உண்மையான சிற்பியாகவும் அதன் செயல்பாடுகள் அனைத்தையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நஜிப்பை விசாரணை செய்ய அழைப்பானை விடுப்பாரா என்று தமது வலைத்தளத்தில் நேற்று ஸைட் கேள்வி எழுப்பியுள்ளார்.
நூர் ஜாஸ்லான் அதனைச் செய்வாரானால், அலுத்துப் போய்விட்ட மக்களான நமக்கு இந்நாட்டு அமைப்புகள் மீதும், பொறுப்பு மிக்க பதவிகளில் இருப்பவர்கள் மீதும் மீண்டும் சற்று நம்பிக்கை வைக்க முடியும் என்று ஸைட் இப்ராகிம் மேலும் கூறியுள்ளார்.
நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்
தைரியம் உண்டு! ஆனால் இது நோன்பு மாதம். கொஞ்சம் தெம்பு குறைவாக இருக்கிறது!
1எம்டிபி விவகாரத்தை விசாரிக்க மாமன்னர் தனிக்குழுவை அமைத்தால்தான் நல்லது…. அவர்களும் துணிச்சலோடு களம் இறங்குவார்கள்….. இல்லையென்றால் அதுவும் இன்னொரு அல்தூதொய கதைபோலகி விடலாம்….