பாக்கத்தான் அழிந்து விட்டதற்காக கிட் சியாங் வருத்தம்

 

Deathofpakatan1கூட்டணியை ஒன்றாக வைத்திருக்க பாக்கத்தான் ரக்யாட் தவறி விட்டதற்காக டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.

பாக்கத்தான் “காலமாகிவிட்ட” போதிலும் டிஎபி அக்கூட்டணியின் பொதுக் கொள்கை திட்டத்தை தொடர்ந்து பின்பற்றும் என்று நேற்றிரவு ஷா அலாமில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிட் சியாங் கூறினார்.

ஒன்றுபட்ட, அனைத்தும் அடங்கிய, முன்னேற்றகரமான, நியாயமான மற்றும் செழித்தோங்குகிற மலேசியாவை அடைய அந்த பொதுக் கொள்கை விரும்புகிறது என்று கூறிய கிட் சியாங், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரு புதிய மலேசியாவுக்கான டிஎபியின் போராட்டம் புத்ரா ஜெயாவில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் தொடரும் என்றார்.

மலேசியாவில் எந்த ஓர் அரசியல் கட்சியும் தனிப்பட்ட முறையில் ஆட்சி நடத்த முடியாது என்ற யதார்த்த சூழ்நிலயில், “முற்போக்கு மற்றும் தேசப்பற்றுடைய அரசியல் தலைவர்கள், பாரிசானில் உள்ளவர்கள் கூட, ஒன்றிணைந்து செயல்பட்டு மலேசியாவை காப்பாற்ற வேண்டும் என்று லிம் கிட் சியாங் அறைகூவல் விடுத்தார்.