பெர்காசா: ஹாடி பிரதமர் வேட்பாளராக வேண்டும், அன்வார் அல்ல

 

Perkasaforhadiடிஎபியுடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மையும் பாஸ் கட்சி நிராகரிக்க வேண்டும். எதிரணியின் பிரதமர் வேட்பாளராக பாஸ் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை முன்வைக்க வேண்டும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பாஸ் கட்சியின் ஸியுரா மன்றம் டிஎபியுடனான உறவை முறித்துக்கொள்வது பற்றி கட்சியின் முக்தாமாரில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எடுத்திருந்த இறுதி முடிவை வரவேற்ற இப்ராகிம் அலி, பாஸ் கட்சி அன்வாரை நிராகரிக்க வேண்டும். இஸ்லாமிய தலைமைத்துவத்தை ஆதரிக்கும் பாஸ் ஓர் இஸ்லாமிய கட்சி என்பதால் நன்னெறியற்ற மற்றும் பன்மைத்துவத்தை ஆதரிக்கும் தலைவர்களை நிராகரிக்க வேண்டும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

“பாஸ் ஹாடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும், அன்வாரை அல்ல”, என்றாரவர்.