கோபிந் சிங்: ஹுஸ்ஸேய்ன் நஜாடி கொலை வழக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும்

 

Reopennajadi'scase1சட்டத்துறை தலைவர் கனி பட்டேயில் 2013 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அம்பேங் நிறுவனர் ஹுஸ்ஸேய்ன் நஜாடியின் வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞரும் டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இக்கொலை சம்பந்தமான விசாரணை இன்னும் முற்றுப்பெறாமல் இருப்பதாக ஹுஸ்ஸேய்னின் மகன் பாஸ்கல் நஜாடி கூறியிருப்பது, போலீஸ் படை மற்றும் சட்டத்துறை அலுவலகம் ஆகியவற்றின் மீதான நம்பகத்தன்மை மீது மிகக் கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது என்றார் கோபிந்த் சிங்.

அது இந்த வழக்கு தீர்க்கப்பட்டு விட்டது என்று மூன்று நாள்களுக்கு முன்பு போலீஸ் படைத்Reopennajadi'scase2 தலைவர் அளித்த எதிர்வினையின் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றாரவர்.

இது ஒரு கடுமையான விவகாரம். ஒரு வழக்கு குறித்து இது போன்ற புகார் எழுப்பப்படுவது இது முதன்முறையல்ல என்று கூறிய கோபிந்த் சிங், தியோ பெங் ஹோக் வழக்கில் எதுவும் இன்னும் தீர்க்கமாக செய்யப்படாமல் இருப்பதையும், அல்தான்துயா வழக்கில் அவரை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை காணாமல் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Reopennajadi'scase3நேற்று, பாஸ்கல் ரஷ்யாவிலிருந்து மலேசியாகினிக்கு ஸ்கைப் வழி அளித்த பேட்டியில் இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் பேர்வழி, லிம் யுஎன் சூ, மலேசியாவுக்கு திரும்பி வந்துள்ளாக கூறினார்.

மேலும், லிம்முக்கு உள்ளூர் மூத்த அரசியல்வாதியின் மனைவியோடு தொடர்பு இருப்பதாகவும் பாஸ்கல் கூறிக்கொண்டார்.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் லிம் அந்தப் பெண்னுடன் கொண்டிருந்த தொடர்பை தெரிந்துகொள்வதற்கு லிம்மின் தொலைபேசி பதிவுகளை போலீசார் பரிசீலிக்க வேண்டும் என்று பாஸ்கல் மேலும் கூறினார்.

பாஸ்கல் எழுப்பியிருக்கும் கேள்விகளின் அடிப்படையில் போலீசார் இந்த வழக்கை மீண்டும் திறந்து அவர் கூறியுள்ளவற்றின் மீது கவனம் செலுத்துவது அவசியம் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.