லவ் யாட் பிளாஷா அருகில் கும்பல் வன்செயல்

lowyatநேற்றிரவு லவ் யாட் பிளாஷா அருகில் நடந்த கும்பல் வன்செயலில் பல செய்தியாளர்களும் பார் ஊழியர்களும் காயமுற்றனர்.

நள்ளிரவு மணி 1.00 அளவில், போலீசார் பலரை கைது செய்தனர். அந்த வன்செயலில் ஈடுபட்டிட்ருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு திசைகளில் பரவியுள்ளனர்.

தாங்கள் மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்று கூறுக்கொண்ட கூட்டத்தினர் நேற்று மாலையில் லவ் யாட் பிளாஷாமுன் கூடினார். அதற்கு முந்தினம் அங்கு நடந்த ஒரு சண்டைக்கு பதிலடியாக அங்கு கூடியிருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

சனிக்கிழமை லவ் யாட் பிளாஷாவின் அடித்தளத்திலிருந்த ஊழியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சச்சரவு வெடித்தது. அதனைத் தொடர்ந்து மால் பணியாளர்கள் ஏழு இளைஞர்களை தாக்கினர்.

இச்சம்பவத்தை காட்டும் வீடியோ காட்டுதீ போல் பரவியுள்ளதோடு, இச்சம்பவம் ஓர் இனவாதப் பிரச்சனையாக விவாதிக்கப்படுகிறது.

இக்கலவரம் ஒரு திருட்டு சம்பவத்திலிருந்து தோன்றியது என்று போலீசார் இதனை வகைப்படுத்தியிருந்த போதிலும் இதற்கு இன்வாதம் பூசப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சுமார் 200 பேர் இரவு மணி 7.00 அளவில் அந்த மாலின்முன் கூடினர். தாங்கள் தாக்கப்பட்ட ஏழு இளைஞர்களுக்கு நீதி கேட்க கூடியிருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

அக்கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடியதைத் தொடர்ந்து அவர்கள் மாலினுல் நுழைய முற்பட்டனர். மால் ஊழியர்களும் போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இரவு மணி 9.00 க்கு மால் மூடப்பட்டது.

கலைந்து சென்ற அக்கூட்டத்தினர் மீண்டும் கூடி போலீசாருடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அக்கலகக்கார கும்பலிடம் கலைந்து செல்லுமாறும் சட்டம் அதன் கடமையைச் செய்ய அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் விட்டுக்கொடுக்க மறுத்ததுடன் மீண்டும் மீண்டும் இனவாத வாதத்தைத் தொடார்ந்தனர்.

நள்ளிரவு அளவில் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை சில இடங்களில் தாக்க ஆரம்பித்தனர், பார் ஊழியர்களும் செய்தியாளர்களும் உட்பட.

இதன் பின்னர், போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டத் தொடங்கினர்.