கடந்த வாரம், வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று வாதாடுகிறார் அம்னோ வழக்குரைஞர் முகம்மட் ஹவாரிசாம்.
மற்ற வழக்குரைஞர்களும் இப்படிச் செய்ததுண்டு என்று குறிப்பிட்ட ஹவாஇசாம், அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் சங்கரா நாயர் அப்படிச் செய்திருக்கிறார் என்றார்.
“முதலாவது செய்தி அறிக்கையில் முதலில் வரும் சில பாராக்கள் அப்பணம் 1எம்டிபி-இலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுவதுபோல் தோன்றுவதால் என் கட்சிக்காரர் (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்) விளக்கம்பெற விரும்பினார்.
“ஆனால், ஐந்தாவது பாராவும் அதற்குப் பின்னர் வரும் பாராக்களும் தகவல் வந்த மூலம் பற்றித் தெரியாது என்று குறிப்பிடுகின்றன. எனவே, செய்தி அறிக்கை தெளிவற்றிருப்பதால் ஊகத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை.
“அதனால், விளக்கம் கேட்போம் என்று கூறியதை என் கட்சிக்காரர்( நஜிப்) ஒப்புக்கொண்டார்”, என்றாரவர்.
விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு அவர்கள் பதிலளிக்கும்போது செய்தி அறிக்கை பணம் 1எம்டிபி-இலிருந்து வந்ததா இல்லையா என்பதைக் கூற வேண்டியிருக்கும் என ஹவாரிசாம் தெரிவித்தார்.
அவர்களின் நிலை தெரிந்த பிறகே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்,
நீங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்னும் நம்பிக்கை எல்லாம் எங்களுக்கு இல்லை!
“பணம் 1எம்டிபி-இலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறுவதுபோல் தோன்றுவதால்…..
அப்படியானால் பணம் நஜிப் வங்கி கணக்குக்கு வந்திருப்பது உண்மை ஆனால் அது 1எம்டிபி-இலிருந்து வரவில்லை என்று மறுப்பு தெரிவிக்கிறீர்களா ? எங்கேயோ இடிக்குதே !