பாஸில் தோல்வியுற்றோர் உருவாக்கிய புதிய அமைப்பு- ஹராபான் பாரு

harapanகடந்த  மாதம்  பாஸ்  கட்சித்  தேர்தலில் தோற்றுப்போன  நிபுணர்  அணி  ‘கெராக்கான்  ஹராபான்  பாரு’ என்ற  பெயரில் ஒரு  புதிய அமைப்பைத்  தோற்றுவித்துள்ளது.

பாஸின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு  முன்னின்று  உருவாக்கியுள்ள  அவ்வமைப்பு,  ஒரு  புதிய இஸ்லாமிய  கட்சியை  உருவாக்கவும்  இரண்டாவது  பக்கத்தான்  ரக்யாட்  கூட்டணியை  அமைக்கவும்  பாடுபடும்.

“ஹராபான்  பாரு  அனைவரையும்  அரவணைக்கும்;  முற்போக்கான  அணுகுமுறையைக்  கடைப்பிடிக்கும், மக்களின்  நலனைக்  கவனிக்கும்”, என  மாட்  சாபு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  முகம்மட்  சாபு  கூறினார்.

“நாங்கள்  ஜனநாயகப்  பண்புகளைப்  பின்பற்றுவோம், எல்லா  இனங்களையும்  சமயங்களையும்  பண்பாடுகளையும்  மதிப்போம்”, என்றாரவர்.