1எம்டிபி சர்ச்சையைவிட லவ் யாட் பிளாசா வன்செயலுக்குத் தீர்வுகாண்பது முக்கியமானது என நினைக்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி.
இந்த விவகாரத்துக்குச் சரியான தீர்வு காணவில்லையென்றால் அது இன உறவுகளை மேலும் மோசமாக பாதிக்கும் என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“அந்த வகையில் இவ்விவகாரம் இப்போதைக்கு 1எம்டிபி-யைவிடவும் பெரிது.
“1எம்டிபி-க்குப் பிரதமர் (நஜிப் அப்துல் ரசாக்) பதில் சொல்லியே ஆக வேண்டும். இன விவகாரம் மிகவும் சிக்கலானது. இதை யாரும் அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கக் கூடாது”, என்றாரவர்.
புக்கிட் பிந்தாங் நிகழ்ந்த சச்சரவால் 1எம்டிபி மீதுள்ள கவனம் திசை திரும்பும் என நஜிப் எண்ணிவிடக் கூடாது என்றும் ரபிஸி கூறினார்.
“1எம்டிபி விவகாரமும் பெரிது. அது நஜிப்பை விடாது. நஜிப் அதிலிருந்து தப்பி ஓட முடியாது. அப்படி நடக்க நான் விட்டு விட மாட்டேன்”, என்றார்.