எம்டிபி விவகாரத்தை விசாரிக்க மகாதிர் தலைமையில் அரச ஆணையம் அமைக்க வேண்டும், கிட் சியாங் கோரிக்கை

 

Task forceதமது பரம வைரியான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தலைமையில் 1எம்டிபி விவகாரத்தை விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் டிஎபியின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங்.

நான்கு டான் சிறீகள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவுக்கு அரச ஆணையத்திற்குரிய அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆகவே, அதனை உடனடியாக அகற்றி விட்டு அதன் இடத்தில் ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறிய கிட் சியாங், அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக மூன்று “துன்”கள் – முன்னாள் பிரதமர்கள் மகாதிர் மற்றும் அப்துல்லா படாவி மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் –  நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

அந்த ஆணையத்தின் தலைவராக மகாதிர், துணைத் தலைவராக மூசா ஹீத்தாம் ஆகியவர்களோடு சுயேட்சையான மற்றும் மலேசியர்களின்DAP-Lim Kit siang நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை, டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மற்றும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரமலி உட்பட, ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

பிரதமர் நஜிப்பிடம் கேட்கப்பட்ட நான்கு மிக முக்கியமான கேள்விகளுக்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை எம்றார் கிட் சியாங். அந்த நான்கு கேள்விகள்:

1. நஜிப்புக்கு அம்பேங்கில் தனிப்பட்ட 3 வங்கிக்கணக்குகள் இருந்தன.
2. 2013 ஆம் ஆண்டில் ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சற்று முன்னால் ரிம2.6 பில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டது.
3.அந்த ரிம2.6 பில்லியன் எங்கிருந்து வந்ததது.
4.அந்த ரிம2.6 பில்லியன் எங்கு, யாரிடம் சென்றடைந்தது.

10 நாள்களுக்கு மேலாகி விட்டது. மேற்கூறப்பட்ட எதனையும் பிரதமர் மறுக்கவில்லை. இந்நிலையில், இந்த நான்கும் உண்மையானவை என்று யாராவது கருதினால் அவரைக் குறைகூற முடியுமா என்று கிட் சியாங் வினவினார்.