அன்வார்: சீரமைப்புகள் இன்றி நஜிப்பை வெளியேற்றுவதில் அர்த்தமில்லை

reformசீரமைப்புகள்  ஏதுமின்றி நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஆட்சியிலிருந்து  அகற்றுவது  ஒரு  சிலருக்கே  நன்மையாக  அமையும்  அதனால்  பயனான  மாற்றங்கள்  நிகழப்போவதில்லை  என்கிறார்  அன்வார்  இப்ராகிம்.

அதனால்  நன்மை  அடைவோரின்  பெயர்களை  அவர்  சொல்லாவிட்டாலும் டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  நெருக்கமானவர்களைத்தான்  அவர்  குறிப்பிடுகிறார்  என்பது  வெள்ளிடைமலை.

“மகாதிர்  தலைமையில் நஜிப், உருப்படியான  சீரமைப்புகள்  ஏதுமின்றி  பதவி அகற்றப்பட்டால், சில  அல்லக்கைகள்  மட்டுமே குதித்துக்  கொண்டாடுவார்கள்.

“மக்களுக்கு  அது  பெரிய மாற்றங்களைக்  கொண்டுவராது”, என  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  அனுபவித்து  வரும்  அன்வார்  கூறினார்.