பாஸ் கட்சி உடனடியாக முடிவெடுத்து சிலாங்கூர், பினாங்கு அரசுகளிலிருந்து வெளியேற வேண்டும் என அதன் முன்னாள் தகவல் தலைவர் மாபூஸ் ஒமார் கூறினார்.
பாஸின் ஆண்டுக்கூட்டத்தில் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஷுரா மன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனியும் அது தாமதிக்கக் கூடாது என்றாரவர்.
“வெளியேற முடிவு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால் பாஸை ஒரு கபடதாரியாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்”, என மாபூஸ் கூறியதாக சினார் ஹரியான் கூறிற்று.
இதனிடையே, சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கந்தர் அப்துல் சமட், சிலாங்கூர் இருப்பது இன்னமும் பக்கத்தான் அரசுதான் என்று நம்புகிறார். பக்கத்தான் உயர் தலைவர்கள் சிலாங்கூரில் இருப்பது பக்கத்தான் அரசல்ல என்று இதுவரை சொன்னதில்லை என்றாரவர்.
“பாஸ் இன்னமும் பக்கத்தான் கூட்டணியில் இருக்கிறது. இது முக்தாமாரிலும் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டது. ஷுரா மன்றத்தின் முடிவால் பாஸ் பக்கத்தானிலிருந்து வெளியேறி விட்டதாக பொருள்படாது”, என பாஸ் உதவித் தலைவருமான இஸ்கந்தர் கூறினார்.
மாநிலம் சிறப்பாக ஓடிகொண்டிருபதை இவருக்கு பிடிக்கவில்லை போலிருக்கு.அதுதான் இவர் சரியான சகுனி.
இஸ்கந்தர் நல்லாவே குழப்புகிறார்.
நல்லது மூட்டை கட்டிக்கொண்டு விலகுங்கள், திறமையான ஆட்சி நடந்தால் உங்களுக்கு பிடிக்காது ,உங்களை போல் உள்ளவர்களுக்கு அரைவேக்காடுகளின் ஆட்சி தான் தேவை .