சாட்சியங்களை மறைத்தல் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பாகும்

abetசாட்சியங்களை  மூடி  மறைப்பவர்கள்  குற்றச்செயலுக்கு  உடந்தையாக  இருக்கிறார்கள்  என்றுதான்  பொருள்படும்  என  எச்சரிக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“அவர்கள்  குற்றவாளிக்கு  உதவுகிறார்கள், உடந்தையாக  உள்ளார்கள். அவர்களும்  குற்றஞ்சாட்டப்பட  வேண்டும்,  விசாரிக்கப்பட  வேண்டும், தண்டிக்கப்பட  வேண்டும்.

“வழக்கு  முடிந்தவுடன்  ஒப்படைக்கலாம்  என்று  திரட்டப்பட்ட  சாட்சியங்களைத்  தங்கள்  வசமே  வைத்துக்கொண்டிருப்பதுகூட உடந்தை  என்ற  குற்றச்சாட்டிலிருந்து  தப்பித்துக்கொள்ள  உதவாது”,என  மகாதிர் அவரது  வலைப்பதிவில்  கூறினார்.

மகாதிர் பெயர்கள்  எதையும்  குறிப்பிடவில்லை. ஆனால், அவர்  1எம்டிபி  பற்றியும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பற்றியும்தான்  குறிப்பிடுகிறார்  என்பது  தெளிவு.