பணிக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என எம்ஏசிசி குழு விரும்புகிறது

panel1எம்டிபி  மற்றும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  விசாரணை  நடத்தும்  சிறப்புப்  பணிக்  குழு  அதன்  அறிக்கையை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படும்.

மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்தை(எம்ஏசிசி)  மேற்பார்வையிடும்  ஐந்து  குழுக்களில்  ஒன்றான  ஊழல்மீதான  குழு(ஜேகேஎம்ஆர்)  இவ்வாறு  தெரிவித்தது. சிறப்புப்  பணிக்குழுவில்  எம்ஏசிசி-யும்  இடம்பெற்றுள்ளது.

“எம்ஏசிசி 2009-இன்படி  ஒவ்வோர்  ஆண்டும்  பிரதமருக்கு  ஓர்  அறிக்கையும்  நாடாளுமன்றத்துக்கு  ஓர்  அறிக்கையும்  கொடுக்க  வேண்டியது ஜேகேஎம்ஆரின்  பொறுப்பு.

“இந்த  விவகாரத்தைப்  பொருத்தவரை  ஜேகேஎம்ஆர், விசாரணை  முடிந்ததும்  விரிவான  அறிக்கையை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யுமாறு எம்ஏசிசி-யைக்  கேட்டுக்கொள்ளும்”, என ஜேகேஎம்ஆர்  தலைவர்  அபு ஸஹார்  உஜாங் கூறினார். அபு  ஸஹார்  மேலவைத்  தலைவருமாவார்.
பணிக்குழு,  மற்றவற்றோடு  பிரதமரின்  சொந்தக்  கணக்குக்கு  ரிம2.6 மில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  விவகாரத்தையும்  ஆராய்ந்து வருகிறது.