அடிபட்டவருக்குப் பழி வாங்கும் எண்ணமில்லை

patricஞாயிற்றுக்கிழமை  பின்னிரவில்  பெட்ரிக்  லிம்,  புக்கிட்  பிந்தாங்  பகுதியில்  இரவுச்  சாப்பாட்டை  முடித்துவிட்டு  நண்பர்கள்  இருவருடன்  காரில்  வீடு  நோக்கிப்  பயணம்  செய்து  கொண்டிருந்தார்.

திடீரென  100 பேரடங்கிய  கும்பல்  ஒன்று  அவரது  காரின்மீது  பாய்ந்தது.

அதன்பின்  நடந்ததைக்  காட்டும்  காணொளி  ஒன்று  சமூக  வலைத்தளங்களில்  உலா  வந்தது. பலர் கண்மூடித்தனமாக  அவரது  காரைத்  தாக்கினார்கள். சுற்றி  நின்ற  போலீசார்  எவ்வளவோ  முயன்றும்  வெறிகொண்ட  கும்பலை  விரட்டியடிக்க  முடியவில்லை. முடிவில்  போலீஸ்காரர்  ஒருவர்  துப்பாக்கியை  உருவி  எச்சரித்ததும்தான்  அடங்கினார்கள்.

அதற்கிடையில்  பெட்ரிக்குக்கு  செம  அடி உதை.

அச்சம்பவத்துக்குப் பின்னர்  இன்று  முதன்முறையாக  செய்தியாளர்களிடம்  பேசினார்  பெட்ரிக், 21.

பெட்ரிக்கிடம் வஞ்சம்  தீர்க்க  வேண்டும்  என்ற  எண்ணமெல்லாம்  இல்லை.

“ஏன்   பழி  வாங்கும்  எண்ணம் இல்லை என்று   பலர்  என்னைக்  கேட்டார்கள். எனக்கு  மலாய்க்கார  நண்பர்களும்  பலர்  இருக்கிறார்கள். அத்துடன்  நான்  இனவாதியாக  இருக்கவும்  விரும்பவில்லை”, என்றாரவர்.