ஆஸி செய்திதாள்கள் மகாதிர்மீது குற்றஞ்சாட்டாதது ஏன்?

ausieமலேசிய  அதிகாரிகள்  ஊழல் விவகாரத்தில்  ஈடுபட்டதாக  செய்தி  வெளியிடும்  ஆஸ்திரேலிய  செய்திதாள்கள்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  பெயரை  இழுக்காதது  ஏன்  என்று  பிரதமர்  அலுவலகம்(பிஎம்ஓ)  கேள்வி  எழுப்பியுள்ளது.

ஊழல்  நடந்ததாகக்  கூறப்படும் 1999-க்கும் 2004க்குமிடையிலான  காலத்தில் மகாதிர்தான்  பிரதமராக  இருந்தார்  என  பிஎம்ஓ  இன்று  வெளியிட்ட  அறிக்கையில்  கூறியது.

“ஆனால், Fairfax Media  அதன்  செய்தி  அறிக்கையில்  எந்த  இடத்திலும்  துன்  மகாதிரைக்  குறிப்பிடவில்லை”, என்று  அது  தெரிவித்தது.

நேற்று, Fairfax Media-வுக்குச்  சொந்தமான  தி எட்ஜ்,  சிட்னி  மார்னிங்  ஹெரால்ட்  செய்தித்தாள்கள்,  புத்ரா ஜெயா   ஆஸ்திரேலிய  அதிகாரிகளின்  முயற்சிகளுக்குத்  தடைபோடுவதாகக்  கூறும் செய்திகளை  வெளியிட்டிருந்தன.