பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஹரி ராயாவின் முதல் நாளில் அவரும் அவரின் குடும்பத்தாரும் அவரின் கணவர் அன்வார் இப்ராகிமைச் சந்திக்க அனுமதிக்கப்படாததை எண்ணி வருத்தமடைந்துள்ளார்.
முன்பு அன்வார் சிறையில் இருந்தபோது ஹரி ராயா முதல் நாளில் அல்லது இரண்டாவது நாளில் அவரைச் சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போது சிறை விதிமுறைகளில் “நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
“ஹரி ராயாவின் இரண்டாவது நாளான நாளை அவரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டோம். கிடைக்கவில்லை. ‘ஹரி ராயாவின் முதல் நாளிலும் இரண்டாவது நாளிலும் நாங்கள்(சிறை அதிகாரிகள்) விடுமுறையில் இருப்போம்’ என்று என்னிடம் தெரிவித்தார்கள்”, என வான் அசிசா நேற்றிரவு கூறினார்.
“(அதிகாரிகள்) ‘மூன்றாம், நான்காம் நாள்களில் நிறைய வருகையாளர்கள் இருபார்கள் 5,000 கைதிகள் இருப்பதால் அவர்களைப் பார்க்க அவர்களின் குடும்பத்தார் வருவார்கள்’அதனால் ஐந்தாவது அல்லது ஆறாவது நாளில் எங்களை வரச் சொன்னார்கள்”, என்றாரவர்.
நேற்றிரவு சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியில் அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கத் திரண்டிருந்த சுமார் 150 ஆதரவாளர்களிடம் வான் அசிசா பேசினார்.

























இதெல்லாம் அநீதியின் உச்ச கட்டம். அதிலும் வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்ட ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்திற்கு இழைக்கும் அநீதி. ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவனுக்கு பதில் கூறியே ஆகவேண்டும். ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றானோ? இவன்கள் தான் இந்த பெருநாளில் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று புத்தி கூறிவிட்டு இப்படி அநியாயம் செய்கிறான்கள்
அன்வார் இப்ராகிம் பதவியில் இல்லாத போதும் எனது ஏழை நண்பரின் இரண்டு பிள்ளைகளுக்கு மருத்துவம் பயில உதவி கரம் நீட்டினார். பாவம் இந்த நிலைமைக்கு ஆகிவிட்டார். கடவுள் அவருக்கு துணை புரிவார்.
அன்வாருக்கு மட்டும் அல்ல உதயகுமாருக்கும் முன்பு இதே நிலைமைதான்.உரிமைக்கு போராடினால் அல்லது குரல் கொடுத்தால் இதுதான் நிலைமை. நீதி வெல்லும். அமைதி காப்போம்.