பெட்ரோசெளதி இண்டர்நேசனலின் இயக்குனர் சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோவை சந்தித்தவர்களின் தானும் ஒருவர் என்று நேரடியாகக் கூறுமாறு பாரிசான் அமைச்சர்களுக்கு டிஎபி பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சவால் விடுத்தார்.
மறைமுகமாக இது பற்றி கூறப்படுவதைத் தொடர்ந்து, நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் கூறியது உட்பட, டோனி இச்சவாலை விட்டார்.
“நான் ஜஸ்டோவை சந்தித்ததாக குற்றம் சாட்டுமாறு பாரிசான் அமைச்சர்களுக்கு சவால் விடுகிறேன்.
“வாருங்கள், பூனைத்தனம் வேண்டாம், சுற்றிவளைத்து பேச வேண்டாம். நாடகம் தேவையில்லை”, என்று டோனி புவா அவரது பேஸ்புக்கில் இன்று பதிவு செய்துள்ளார்.
சரியான போட்டி . பதில் சொல்லுங்கள் அமைச்சரே ?
மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. திருடனுக்கு சரனாலாயம் புத்ரஜெயா என்றால் காட்டிக் கொடுத்தவனுக்கு புகலிடம் மக்களே.
அவர்களுடைய குண்டர் கும்பல்களுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லத் தயாரா? அதன் பின்னர் உங்களுடைய சவாலைப் பற்றி யோசிக்கலாம்!