‘என்னுடையது ஜோடிக்கப்பட்ட மின்னஞ்சல் என்றால் உங்களுடையதைக் காண்பியுங்கள்’

rewசரவாக் ரிப்போர்ட்  தலைமைச்  செய்தியாசிரியர்  கிளேர்  ரியுகாஸல்  பிரவுன்,  தம்மை ஜோடிக்கப்பட்ட  ஆவணங்களைக்  கொண்டு செய்திகள்  வெளியிட்டதாகக் குற்றஞ்  சாட்டுபவர்களால்  அதற்கான ஆதாரங்களைக்  காண்பிக்க  முடியுமா  என்று  சவால்  விடுத்துள்ளார்.

“லெஸ்டர்  மெலாஞி நான்  அனுப்பிய  மின்னஞ்சலைப் பயன்படுத்திப்  பொய்களைப்  பரப்பியபோது  நான் உடனடியாக   என்னுடைய உண்மையான  மின்னஞ்சலை  வெளியிட்டது  நான்  குற்றவாளி  அல்ல  என்பதை  நிரூபித்தது, அவரது  வாயையும்  கட்டிப்போட்டது.

“பெட்ரோசவூதி  ஏன்  அதைப்போன்று  செய்யவில்லை?”, என ரியுகாஸல்  வினவினார்.

பெட்ரோசவூதி  இண்டர்நேசனலின்(பிஎஸ்ஐ)  ஆவணங்களில்  “மாற்றம்  செய்து”  அவற்றைப் பயன்படுத்தி  1எம்டிபி-யைக்  குறைகூறும்  செய்திகளை  வெளியிட்டதாகக்  கூறும்  மலேசிய  அதிகாரிகளுக்கு  ரியுகாஸல்  இவ்வாறு  பதிலளித்தார்.

இதுவரை ரியுகாஸலைக்  குறை  சொல்லும்  தரப்புகள்- 1எம்டிபி,  பிஎஸ்ஐ,  மலேசிய,  தாய்  அதிகாரிகள்-  எது  ஜோடிக்கப்பட்ட  ஆவணம்  என்பதைத்  தெளிவாகக்  கூறியதில்லை.