பாஸ்: கிளர்ச்சிக்காரர்களால் பிஎன்னுக்குத்தான் நன்மை

ghbகெராக்கான்  ஹராபான்  பாரு(ஜிஎச்பி)  அமைந்திருப்பது  பிஎன்னுக்குத்தான்  நன்மையாக  முடியும்  என்று  சிலாங்கூர்  பாஸ்  ஆணையர்  இஸ்கந்தார்  சமட்  கூறினார்.

ஜிஎச்பி,  பாஸ்  உறுப்பினர்களிடையே  தன்னை  வலுப்படுத்திக்  கொள்வதில்தான் கவனமாக இருக்குமே  தவிர  அம்னோவையும்  பிஎன்னையும்  எதிர்ப்பதில்  அதன்  கவனம்  செல்லாது.

ஜூன் மாதம்  பாஸ்  தேர்தலில்  தோல்வியுற்ற  முற்போக்காளர்கள்  சேர்ந்து  இந்த  ஜிஎச்பியை  அமைத்திருக்கிறார்கள். இதனைக்  கொண்டு  ஓர்  அரசியல்   கட்சியை  உருவாக்கும்  நோக்கமும்  அவர்களுக்கு  உண்டு.

ஜிஎச்பி-யால்  பாதிக்கப்படப்போவது  பாஸ்தானே   தவிர  பிஎன்  அல்ல  என்று  இஸ்கந்தார்  கூறினார்.

“அது  பாஸ்  உறுப்பினர்களையும்  ஆதரவாளர்களையும்  வாக்காளர்களையும்தான்  தன்  பக்கமாக  இழுத்துக்  கொள்ளும்.

“அம்னோவின்  உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள், வாக்காளர்கள்   அப்படியேதான்  இருப்பார்கள்”, என்றார்.

“இதனால் எதிரணிக்கு  ஆதரவு அதிகரிக்காது. எதிர்க்கட்சிகளின்  வாக்குகள்தான்  அங்குமிங்கும்  மாறி  விழும்.

“எதிரணியினரின்  சச்சரவைப்  பார்த்து    மாற்றுக்  கட்சியாக  விளங்கும்  தகுதி  இதற்கு  இல்லையென்று  முடிவு  செய்து  வாக்காளர்கள்  பிஎன்  பக்கம்  சாயும்  சாத்தியமும்  உள்ளது”, என்றார்.